செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் அனைத்து மாகாணங்களுக்கும் இடையே பயணக் கட்டுப்பாட்டை விதிக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை தேவைப்பட்டால் எதிர்வரும் நாட்களில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளையும் விதிக்கலாம் என்றும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.