செய்திகள்

இன்று முதல் தனியர் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை

தனியார் துறையினரின் சம்பளத்தை இன்று முதல் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது. இதன்படி தனியார் துறையில் பணியாற்றும் சகல ஊழியர்களினதும் ஆகக் குறைந்த மாத சம்பளம் 10,000 ரூபாவாக இருக்க வேண்டும் என்பதுடன் நாளாந்த  சம்பளம்  400 ரூபாவாக இருக்க வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது .
இதேவேளை தனியார் பிரிவிற்காக அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்ட 2500 ரூபா  சம்பள உயர்வில் 1500 ரூபாவை இம்மாதம் முதலும் மிகுதி 1000ரூபாவை 2016 ஜனவரி மாதம் முதலும் அதிகரிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கென 2005 சம்பள நிர்ணய சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் தொழில் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன அமைச்சரவைக்கு சமர்ப்பித்த யோசனை திட்டத்துக்கு அங்கிகாரம் கிடைத்துள்ளது.