செய்திகள்

இன்று முதல் வெங்காயம், உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி உயர்வு

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான இறக்குமதித் தீர்வை 40 – 55 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதித் தீர்வை 10 – 30 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.