செய்திகள்

இன்று முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்

எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இன்று முதல் தாக்கல் செய்யலாம்.

தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளும் மற்றும் சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுக்களை இன்று காலை முதல் எதிர்வரும் 13ம் திகதி நன்பகல் 12மணி வரை அந்தந்த மாவட்டங்களில் அமைந்துள்ள மாவட்ட செயலகங்களில் தாக்கல் செய்யமுடியுமென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் மாவட்ட செயலக பகுதிகளில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பேரணிகள் மற்றும் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பகுதியில் சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.