செய்திகள்

இயக்குனராகும் அஜித்

வீரம் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கவிருக்கிறது.  அதற்கு முன், அஜீத்தே ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அடுத்தகட்டப் படப்பிடிப்புக்குப் போக ஒருபடத்தை இயக்கி முடிக்கிற அளவுக்கு அவ்வளவு பெரிய இடைவெளியா என நினைக்கவேண்டியதில்லை. அவர் இயக்கப்போவது குறும்படமாம். ஓரிருநாட்களில் அதன் படப்பிடிப்பை முடித்துவிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அந்தப்படத்தில் அஜீத் நடிக்கப்போவதில்லையாம். அதில் நடிக்கவிருப்பவர் தேசியவிருது பெற்ற அப்புக்குட்டி என்று சொல்கிறார்கள்.

வீரம் படத்தில் அஜீத்துடன் அப்புக்குட்டி நடித்திருந்தார். அப்போதிருந்து அடிக்கடி சந்தித்துப்பேசிக்கொள்ளுமளவுக்கு இருவரிடையே நட்பு உண்டாகியுள்ளதாம். உன்னுடைய திறமைக்கேற்ற மதிப்பு இன்னும் கிடைக்கவில்லை, உன்னை இன்னும் பன்மடங்கு நான் உயர்த்துகிறேன் என்று அப்புக்குட்டியிடம் சொல்லியிருக்கும் அஜித், அதைச் செயல்படுத்தும் விதமாகவே இந்தக்குறும்படத்தை எடுக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அடுத்து முழுநீளப்படமொன்றை இயக்குவதற்கான முன்னோட்டம்தான் இந்தப்படம் என்றும் சொல்லப்படுகிறது