செய்திகள்

இரட்டை வாக்குச் சீட்டு வேண்டும் இல்லையேல் 20ஐ எதிர்ப்போம் : சிறிய கட்சிகள் தீர்மானம்

கட்சிக்கும் வேட்பாளருக்குமென இரட்டை வாக்குச் சீட்டு முறைமையை நடைமுறைப்படுத்தும் யோசனையை உள்ளடக்கினால் மட்டுமே தேர்தல்திருத்தமான 20வது அரசியலமைப்பு திருத்தத்தை ஆதரிப்போம் என சிறுபான்மை கட்சிகளும் மற்றும் சிறிய கட்சிகளும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
நேற்று இரவு கொழும்பில் நடைபெற்ற சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளுக்கிடையே 20வது திருத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட சந்திப்பிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதல் முஸ்லிம் காங்கிரஸ் , ஈ. பி. டி.பி , ஜனநாயக மக்கள் முன்னணி , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , ஜே.வி.பி , இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டுள்ளன.
இங்கு மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அந்த யோசனை இன்றி 20வது திருத்தத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என அவர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.