செய்திகள்

இரண்டு கூட்டங்களுக்கும் வாழ்த்து செய்திகளை அனுப்பி வைத்த மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏதேனும் மே தினக் கூட்டத்தில் கலந்தக்கொள்வார் என அரசியல் வட்டாரங்களில் கடந்த சில வாரங்களாக கதைக்கப்பட்ட போதும் நேற்று நடைபெற்ற எந்தவொரு மே தின கூட்டத்திலும் அவர் கலந்துக்கொள்ளவில்லை.
ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்துக்கும் மற்றும் தனக்கு ஆதரவான தரப்பினர் நடத்திய கூட்டணியின் மேதின கூட்டத்துக்கும் அவர் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பி வைத்திருந்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்துக்கு ஆனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவும் , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் நடத்திய கூட்டத்துக்கு அனுப்பிய கடித்தை ஸ்ரீ.ல.சு.க எம்.பியான சாலிந்த திஸாநாயக்கவும் வாசித்துள்ளனர்.
கடந்த 10 வருடங்களாக தனது தலைமையில் கொழும்பில் பாரிய மேதின கூட்டங்களை நடத்தி வந்த மஹிந்த ராஜபக்ஷ தனது தோல்வியின் பின்னர் மே தின கூட்டத்தை தவிர்த்துக்கொண்டுள்ளார்.