செய்திகள்

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மட்டக்களப்பில் உள்ள வீட்டுக்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வியாழேந்திரனின் பாதுகாப்புப் பிரிவை சேர்ந்த ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகவும் இதில் மணல் லொறியொன்றின் சாரதியொருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கும் குறித்த சாரதிக்கும் இடையே அண்மையில் வாய்த்தர்க்கமொன்று ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அவர் இன்று வாகனமொன்றில் வீதியில் பயணிக்கும் போது குறித்த பொலிஸ் அதிகாரி சாரதி மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது இராஜாங்க அமைச்சர் வீட்டில் இருந்திருக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
-(3)