செய்திகள்

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 12000 பேர் மீண்டும் வந்தனர்: பொது மன்னிப்பு காலம் நீடிக்கப்பட்டது

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கென வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 25ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொது மன்னிப்பு காலம் பிரகடனப்படுத்தப்பட்ட நாள்முதல் இன்று வiர் 12 ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவ சிப்பாய்கள் மீண்டும் திரும்பி வந்துள்ளதாக இரராணுவ பேச்சாளர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
கடந்த 2ம் திகதி முதல் நாளை வரையே பொது மன்னிப்பு காலம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ் சிங்கள புத்தாண்டு காலம் என்பதால் அந்த காலப்பகுதி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொது மன்னிப்பு காலப்பகுதியில் மீண்டும் சேவையில் இணைய விரும்புவர்கள் அதில் இணைந்து கொள்ள முடியும் என்பதுடன் விலக விரும்புவோர் சட்டபூர்வமாக விலக முடியும்.
கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் 40ஆயிரத்திற்கும் அதிகமானோர் இராணுவத்திலிருந்து தப்பி சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.