செய்திகள்

இராணுவப் புரட்சிக்கு மகிந்த முற்படவில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவது உறுதியாகியிருந்த நிலையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜக்ஷ இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முனைந்தார் என்ற குற்றச்சாட்டை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உயர் நீதிமன்றம் நிராகரித்திருக்கின்றது.

மகிந்த ராஜபக்ஷ கடந்த தேர்தலின்போது தோல்வியை தழுவுவதற்கான அறிகுறிகள் தென்பட்டபோது இராணுவ ஆட்சியை கொண்டுவர முயன்றார் என ஐ.தே.க. குற்றஞ்சாட்டியிருந்தது. இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவது தொடர்பில் அலரிமாளிகையில் நள்ளிரவு இரகசிய சந்திப்பு ஒன்றும் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது முன்னிலை சோசலிக் கட்சி உயர் நீதிமன்றத்தில் மனுஒன்றைத் தொடுத்திருந்தது. 25 மாவட்டங்களில் மகிந்த ராஜபக்ஷ இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முனைந்தார் என்ற குற்றச்சாட்டை நிராகரித்த நீதிமன்றம் அவ்வாறு ஒரு வழக்கை மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மேற்கொள்ள முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது.