செய்திகள்

இராணுவ கட்டுப்பாடுகளையும் மீறி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிவாஜிலிங்கம் அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்த உறவுகளுக்காக எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார்.முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு இன்று திங்கட்கிழமை சென்று உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார்.இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை, முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அனுஷ்டிக்க அரசாங்கம் தடை விதித்திருந்தது. அங்கு யாரும் செல்லாத வகையில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர், புலனாய்வாளர்கள், பொலிசார் என கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இராணுவ கட்டுப்பாடுகளையும் மீறி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குள் நுழைந்த முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.(15)