செய்திகள்

இராணுவ முகாம்களை நீக்குவது தொடர்பாக இராணுவமே தீர்மானிக்க வேண்டும் : பிரதமர்

தமது அரசாங்கத்தில் எந்தவொரு இராணுவ முகாமும் நீக்கப்படவில்லையெனவும் அவ்வாறு இராணுவ முகாம்களை நீக்குவது தொடர்பாக தீர்மானிக்க வேண்டியது இராணுவமே எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் இராணுவ முகாம்களை நீக்கும் விடயம் தொடர்பாக இராணுவத்தினரே தீர்மானிக்க வேண்டும். ஆனால் அவர்கள் இதுவரை தீர்மானக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.