செய்திகள்

‘இருண்ட பங்குனி’ என்ற சுலோகத்துடன் பெண்கள் அமைப்புக்கள் வவுனியாவில் ஊர்வலம்

‘இருண்ட பங்குனி” என சுலோக அட்டைகளுடன் வவுனியாவில் பெண்கள் அமைப்புக்கள் அமைதியான ஊர்வலம் ஒன்றினை இன்று மேற்கொண்டுள்ளனர்.

வடமாகாண பெண்களின் மாற்றத்திற்கான பரிந்துரை வலையமைப்பின் ஏற்பாட்டில் பெண்கள் அமைப்புக்கள் இணைந்து இந்த ஊர்வலத்தினை மேற்கொண்டன.

வவுனியாஇ ஏ9 வீதியில் உள்ள இளைஞர் சேவைகள் மன்றம் முன்னால் ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் வவுனியா, பசார் வீதி வழியாக சென்று மாவட்ட செயலகத்தை அடைந்தது. வாயினை கறுப்புத் துணிகளால் கட்டியவாறு சிறுவர் மற்றும் பெண்கள் துஸ்பிரயோகத்திற்கு எதிரான சுலோக அட்டைகளுடன் ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார அவர்களிடம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குரிய மகஜரினை கையளித்தனர்.

ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் ‘ பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகத்தை தடுப்போம், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள், பெண்களின் வன்முறைக்கு எதிராக உடனடியாக தண்டனைகளை நிறைவேற்று, பெண்கள் மற்றும் சிறுவர் வன்முறை தொடர்பில் தேசிய கொள்கை வகுக்கபட வேண்டும் என எழுதப்பட்ட சுலோ அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

இதேவேளை, இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் இந்த ஊர்வலம் இன்று இடம்பெறுவதுடன் மாகாண ரீதியாக ஜனாதிபதியை சந்தித்து மகஜர் கையளிக்க பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கொழும்பு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

IMG_0242 IMG_0311

IMG_0263

N5