செய்திகள்

இரு பிள்ளைகளின் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைக்க முயன்ற தந்தை கைது (படங்கள்)

மலையகத்தின் பொகவந்தலாவ வானகாடு தோட்டத்தில் இரண்டு பிள்ளைகளின் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைக்க முயன்ற தந்தை ஒருவரை பொகவந்தலாவ பொலிஸார் 07.05.2015 அன்று இரவு கைது செய்து செய்துள்ளனர்

குறித்த பிள்ளைகளின் தாய் மலேசியா நாட்டிற்கு வீட்டு பணிப்பெண்ணாக  சென்றுள்ளார்.

குறித்த நபரின் மனைவி வெளிநாடு சென்று  நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.  தான் பெற்ற பிள்ளைகளை மண்ணெண்ணை ஊற்றி தீ வைக்க முயற்சித்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில்  பொலிஸாரால் மீட்கபட்ட 08வயது மற்றும் 04வயது கொண்ட பிள்ளைகள் இருவரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையால் தாக்கபட்டு மண்ணெண்ணை ஊற்றி தீ வைக்க முயன்ற 08வயது சிறுவனின் வலது காலில் காயங்களும் காணபட்டுள்ள இதேவேளை குறித்த இரண்டு பிள்ளைகளை 07.05.2015 அன்று இரவு அறை ஒன்றுக்கு அழைத்து சென்று மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைக்க முயன்றபோது குறித்த இரண்டு சிறுவர்களின்  சத்தத்தை கேட்ட ஆயலவர்களால் இருவரும் காப்பாற்றப்பட்டதாக 08வயது சிறுவன் பொலிஸாருக்கு அழித்த வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

இதே கடந்த ஒருமாதத்திற்கு முன்பு குறித்த தந்தையால் இரண்டு சிறுவர்களை மண்ணெண்ணை ஊற்றி தீ வைக்க முயன்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தந்தையை 08.05.2015 அன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில்

ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Bogo Police  (1)

Bogo Police  (2)

Bogo Police  (3)

Bogo Police  (4)