செய்திகள்

இறுதிப்போட்டி வீரர்களின் கடைசி முயற்சி: ரோகிச் சர்மா

நம்முடைய கடைசி முயற்சியை பெருமளவில் வெளிப்படுத்த வேண்டும் என நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்கு முன்னதாக மும்பாய் இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோகித் சர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முடிவாக கோப்பையை வெல்லும் இறுதி நாளுக்கான நீங்கள் காத்திருக்கிறீர்கள். கடந்த காலத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது முக்கியமல்ல. ஆனால் நீங்கள் வெற்றி பெறாவிட்டால் உங்களது முயற்சிகள் எல்லாம் விரயமாக போய்விடும்.இந்த தொடரை நாம் சிறப்பாக தொடங்கவில்லை. ஆனால் அணியின் வீரர்கள் பெருமளவில் ஆற்றல் படைத்தவர்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்று நம்பினேன். அது நடந்தது.

கேப்டனாக இருந்து நான் சொல்வது என்னவென்றால் நம்முடைய கடைசி முயற்சியை பெருமளவில் வெளிப்படுத்த வேண்டும். நாம் இறுதிப் போட்டியில் விளையாடும் அதிர்ஷ்டம் பெற்றாலும் 2015 இல் நாம் தான் முன்னணி என்று உறுதியாக தீர்மானிக்க நாளை நாம் திறமையாக செயல்பட வேண்டும்.இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்