செய்திகள்

இறுதிப் போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் – இந்திய லெஜண்ட்ஸ் நாளை மோதுகின்றன!

வீதிப் பாதுகாப்பு ரி-20 உலகத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை லெஜண்ட்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

நேற்று (19) நடைபெற்ற 2ஆவது அரையிறுதியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணி தென்னாப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த போட்டியில் வெற்றிபெற இலங்கை அணிக்கு 126 ஓட்டங்கள் என்ற இலக்கை நிர்ணயித்திருந்தது தென்னாப்பிரிக்க அணி. அந்த இலக்கை இலங்கை அணி 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்கள் பெற்று வெற்றிக்கொண்டது.

சிந்தக ஜெயசிங்க ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களும், உபுல் தரங்க ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

இதைதொடர்ந்து இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கும், இந்திய லெஜண்ட்ஸ் அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டி நாளை (21) இரவு 7.00 மணிக்கு மும்பையில் நடைபெறவுள்ளது. -(3)