செய்திகள்

இறுதி தீர்ப்பு அல்ல என்கிறார் கருணாநிதி

ஜெயலலிதா வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்திருப்பது இறுதி தீர்ப்பு அல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்பட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி இன்று தீர்ப்பளித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்திருப்பது இறுதி தீர்ப்பு அல்ல என்றும், நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதிமன்றம் ஒன்று உள்ளது. அது மனசாட்சி என்றும் கூறியுள்ளார்.