செய்திகள்

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங்கின் பெயர் பரிந்துரை

அமெரிக்காவின் இலங்கைக்கான புதிய தூதுவராக ஜூலி ஜியோன் சுங் (jule jiyoon chung) என்பவரை நியமிக்க ஜனாதிபதி ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார்.இதேவேளை, தற்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அலைனா பி டெப்லிட்ஸ் அம்மையார் பணியாற்றி வருகின்றார்.இவருக்கு பதிலாகவே ஜூலி ஜியோ சுன் என்பவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த நியமனம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

ஜூலி சங் தற்போது மேற்கு அரைக்கோள விவகாரங்களுக்கான மாநில உதவி செயலாளராக பணியாற்றி வருகிறார் அத்தோடு, இவர் செயலாளரின் சிறப்பு மரியாதை விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.மேலும் முன்னதாக இவர் கம்போடியாவின் புனோம் பென் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தலைவராகவும் தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இடைநிலை ஒருங்கிணைப்பாளருக்கு சுங் தலைமை பணியாளராகவும் பணியாறிறயுள்ளார்.மேலும் கொலம்பியா, வியட்நாம் மற்றும் ஜப்பானில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும், சீனாவின் குவாங்சோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை இவரின் நியமனத்தை அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தினால் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜுலி சங் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.(15)