செய்திகள்

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய இராணுவ தளபதி திருகோணமலைக்கு விஜயம்

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்தார்.திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரின் வாசஸ்தலம் அமையப்பெற்ற இடத்திலும் அக்காலப்பகுதியில் இந்திய இராணுவ முகாம் அமைந்திருந்ததுடன் அதனை அவர் பார்வையிட்டதுடன் இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் குறித்த இராணுவ முகாமில் தாம் வசித்ததாகவும் அப்போது இந்திய இராணுவத்தின் லெப்டினனாக கடமையாற்றி இருந்ததாக தனது ஞாபகங்களை மீட்டுக்கொண்டார்.