செய்திகள்

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் குறித்து சிங்கப்பூரில் பேச்சு

இலங்கையில் மீள்நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், ஜனநாயகத்தை வலுப்படுத்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சிங்கப்பூரில் நடைபெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நேற்று முன்தினம் ஆரம்பமாகியுள்ளதுடன் இன்றைய தினம் நிறைவுபெற்றுள்ளது.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள், சிவில் பிரதிநிதிகள், அரசியல், கல்வி சார் புத்திஜீவிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

தென்னாரிபிக்காவைச் சேர்ந்த நல்லிணக்க அமைப்பு, சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்காவின் தற்போதைய நிலைமைகள், முன்னைய சம்பவங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன.