செய்திகள்

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மதியம் 12 மணி தொடக்கம் நாளை காலை 6 மணி வரை விசேட சோதனை நடவடிக்கை

இலங்கையிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி தொடக்கம் நாளை காலை 6 மணி வரை விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.இதேவேளை மது அருந்தி வாகனம் செலுத்துபவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் மற்றும் அனைத்து பிரதேச பிரிவுகளுக்கு பொறுப்பாகவுள்ள அதிகாரிகளுக்கு, பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு விடுத்துள்ளதென அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.மேலும் கடந்த 13ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 6 மணி வரை நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, மது அருந்தி வாகனம் செலுத்திய 1834பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.(15)