செய்திகள்

இலங்கையிலிருந்து வரும் நேரடி விமானச் சேவைகளுக்குக் குவைத் தடைவிதித்தது

இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளிருந்து வரும் வணிக விமானங்களைக் காலவரையின்றி நிறுத்திவைப்பதாக குவைத் சிவில் விமானச் சேவை தெரிவித்துள்ளது.மேற்குறிப்பிட்ட நாடுகளில் கொரோனா ஆபத்தானது அதிகளவில் உள்ளமையினால் தொற்று நிலையை கருத் திற்கொண்டு குவைத் சுகாதார அதிகாரிகளின் அறி வுறுத்தல்களின்படி இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் குவைத் மேலும் அறிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட நாடுகளில் உள்ளவர்கள் குவைத் செல்லு முன் மூன்றாவது நாட்டில் 14 நாட்கள் தங்கியிருக்க வேண் டும் என குவைத் சிவில் விமானச் சேவை அறிவித் துள்ளது.இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றானது தீவிரமடைந் துள்ளமையினால் இலங்கையிலிருந்து வரும் நேரடி விமானச் சேவைகளுக்குக் குவைத் தடைவிதித்துள்ளது.(15)