செய்திகள்

“இலங்கையில் ‘அஸ்ட்ரா செனகா’ தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட மூவர் குருதி உறைவால் உயிரிழந்துள்ளனர்”

இலங்கையில் ‘அஸ்ட்ரா செனகா’ கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட மூவர் குருதி உறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

குறித்த தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் குருதி உறைவுக்கு உள்ளான பல சம்பவங்கள் உலகில் பதிவாகியுள்ளன. இலங்கையில் அறுவருக்கு அவ்வாறான நிலை ஏற்பட்டது. அதில் மூவர் உயிரிழந்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசி மற்றும் பக்கவிளைவுகள் தொடர்பான குழு தெரிவிக்கையில் குருதி உறைவுக்கும், தடுப்பூசிக்கும் எந்தவித நேரடி தொடர்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

அதாவது மில்லியன் மக்கள் தொகையில் 4-6 பேர் இவ்வாறு பாதிக்கப்படுகின்றனர். நோய் தொற்றால் அவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என்பது அவர்களின் கருத்து. எனினும் இவ்வாறு குருதி உறைவு ஏற்படுவது குறைவு. தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்றுக்கொண்டுள்ளது.´ என்றார்.

-(3)