செய்திகள்

இலங்கையில் இன்று மட்டும் 609 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இந்த தொற்றாளர்களில் 496 பேர் பேலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏனையவர்களில், தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 48 பேருக்கும், காலி மீன்பிடித் துறைமுகத்தில் ஐந்து பேருக்கும், பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் 20 பேருக்கும், பேருவளை மீன்பிடித் துறைமுகத்துடன் தொடர்புடைய 40 பேருக்கும் இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை பேலியகொட மீன் சந்தைத் தொகுதியில் தொழில்புரிந்து வீடு சென்ற இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து அவருடன் நெருக்கமாக இருந்த சுமார் 60 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.கொழும்பிலிருந்து குறித்த நபர் பொது போக்குவரத்து பயன்படுத்தியுள்ளதுடன், எம்பிலிப்பிட்டிய நகரில் அந்நபர் சென்றுவந்த 42 கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.(15)