செய்திகள்

இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பயன்பாடு இடைநிறுத்தப்படவில்லை – சுகாதார அமைச்சர்

இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பயன்பாடு இடைநிறுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.தடுப்பூசி திட்டத்தின் போது ஏற்படும் அரிய ஒவ்வாமை நிலைமைகள் குறித்த தேவையற்ற பிரசாரம் தடுப்பூசி திட்டத்திற்கு இடையூறாக அமையலாம் என்றும் சுகாதார அமைச்சர் கூறினார்.அத்துடன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி மட்டுமல்ல, வேறு எந்த தடுப்பூசியாலும் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என குறிப்பிட்ட அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தற்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட ஒரு இலட்சம் பேரில் ஒருவருக்கு ஒவ்வாமை ஏற்படலாம் என மேலும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட தடுப்பூசியை பொதுமக்கள் நம்பிக்கையுடன் பெற்றுக்கொள்கின்றனர் ஆனால் இது தொடர்பாக தேவையற்ற பிரசாரம் பொதுமக்கள் நம்பிக்கை இழக்க காரணமாக அமையும் என்று அஸ்ட்ராசெனெகா கோவ்ஷீல்ட் தடுப்பூசி பயன்பாது இடைநிறுத்தப்பட்டுள்ளதா என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.(15