செய்திகள்

இலங்கையில் கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி முதல் இதுவரை கொரோனா 3ஆவது அலையால் 2024 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி முதல் இதுவரை 2024 பேர் பலியாகினர் என்று கொரோனாத் தடுப்புச் செயற்பாட்டு மையம் வெளியிட்டிருந்த தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2021 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு பின்னர் அதாவது ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் இந்த இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை 2020 ஒக்டோபர் 04 முதல் 2021 ஏப்ரல் 14 வரை ஏற்பட்ட இரண்டாவது அலையின் போது 596 பேர் மாத்திரமே கொரோனா தொற்றினால் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)