செய்திகள்

இலங்கையில் கொரோனா : தொற்றியோர் எண்ணிக்கை 19,000 ஐ கடந்தது!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 220 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 19,061 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் மினுவாங்கொட மற்றும் பேலியாகொட கொரோனா கொத்தணியின் தொற்றாளர் எண்ணிக்கை 15,550 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றைய தினத்தில் மேலும் 368 பேர் குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய இதுவரையில் 13,271 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது வைத்தியசாலைகளில் 5790 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். -(3)