செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றால் நேற்று 47 மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினத்தில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

26 ஆண்களும் மற்றும் 21 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,917 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 289,153 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 263,758 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
-(3)