செய்திகள்

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

உயிரிழந்தவர்களில் 26 ஆண்களும், 17 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,002 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 292,608 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 265,708 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
-(3)