செய்திகள்

இலங்கையில் கொரோனா மீண்டும் தீவிரமடையும் அபாயம்: சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று தலைதூக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் சில பிரதேசங்களில் மக்கள் சுகாதார ஒழுங்குவிதிகளை முறையாக பின்பற்றாத காரணத்தினாலேயே மீண்டும் தொற்றுப் பரவும் நிலை உருவாகியுள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்னும் 4 -6 வாரங்களில் கொரோனா பரவல் தீவிரமடையலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை மேல், வடமேல் வடக்கு மற்றும் கிழக்கு மாணாங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிவதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலை உருவாகியுள்ளது என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. -(3)