செய்திகள்

இலங்கையில் கோவிட் தொற்றினை எதிர்கொள்ளல்

இலங்கையினை கோவிட் தொற்று 3 அலைகளாக பாதித்துள்ளது.

முதலாவது அலையானது 11/3/2020 தொடக்கம் 3/10/2020 வரை ஏற்பட்டது. இதில் 3397 பேர் பாதிக்கப்பட்டனர். இரண்டாவது அலை 4/10/2020 தொடக்கம் 14/4/2021 வரை ஏற்பட்டது. இதில் 92,340 பேர் பாதிக்கப்பட்டனர். மூன்றாவது அலை 15/04/2021 இருந்து தற்போதுவரை உள்ளது. இதில் 204,155 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட் தொற்றுக்களை கொத்தணிகளாக ஆராயும் போது முதலாவது கொத்தணி மினுவாங்கொட கொத்தணியில் 3,059 பேரும் மீன்சந்தை துறைமுகக் கொத்தணியில் 82,785 பேரும் புதுவருடக் கொத்தணியில் 200,890 பேரும் வெளிநாட்டில் இருந்து வந்த கொத்தணியில் 6,442 பேரும் சிறைச்சாலைக் கொத்தணியில் 4,800 பேரும் பாதிக்கப்பட்டனர்.

கோவிட் தொற்றின் முதல் அலையின் போது இறப்புவீதம் 0.38% ஆகவும் (13 இறப்புக்கள் இரண்டாவதுஅலையின் போது இறப்புவீதம் 0.64% ஆகவும் (591 இறப்புக்கள்) மூன்றாவதுஅலையில் 1.75% ஆகவும் (3591) இறப்புக்கள் அமைந்துள்ளது.

ஓட்டுமொத்தத்தில் கோவிட் தொற்றால் 90.15% குணமடைந்தவர்களாகவும் 1.4% சிகிச்சை பலனின்றி இறந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.

கோவிட் தொற்றில் பாதிக்கப்படுபவர்களில் 12$ ஆனோர் 60 வயதிற்குமேற்பட்டவர்களாகவும் 60மூ ஆனோர் 21-60 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் 7.4% ஆனோர் 10 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் காணப்படுகின்றனர்.

கோவிட் தொற்றால் இறந்தவர்களில் 77% ஆனோர் 60 வயதிற்குமேற்பட்டவர்களாகவும் 22% ஆனோர் 30-60 வயது வரையானோரும் 1% 30 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் காணப்படுகின்றனர்.

கோவிட் தொற்றால் இறப்பவர்களில் 77.6% ஆனோர் வைத்தியசாலைகளிலும் 15.2மூ ஆனோர் வீடுகளிலும் இறந்துள்ளனர்.

கோவிட் முதல் அலையின் போது நாடு முழுவதும் கோவிட் நோயாளர்களுக்கு என 1,300 படுக்கை வசதிகள் வைத்தியசாலையில் செய்யப்பட்டன. இரண்டாம் அலையின் போது 13,000 படுக்கை வசதிகள் வைத்தியசாலையில் விஸ்தரிக்கப்பட்டன. தற்போதைய மூன்றாம் அலையில் 40,000 படுக்கை வசதிகள் வைத்தியசாலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ சேவைகள் இயன்றவரை விஸ்தரிக்கப்படடுள்ள போதும் போதிய முற்காப்பு நடவடிக்கைகளால் கோவிட் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்துதல் மிகவும் இன்றியமையாததாகும்.

இதுவரை இலங்கையில் 14 தாய்மார்கள் கொவிட் தொற்றுடன் இறந்துள்ளனர். 240 கர்ப்பிணித்தாய்மார்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கர்ப்;பிணித்தாய்மார்கள் கோவிட் தொற்றினால் பாதிப்படையாதிருப்பதற்கு தடுப்பு மருந்துகளை பெற்றுக்கொள்ளல் அவசியமாகும்.

கர்ப்பிணித் தாய்மார்கள் கோவிட் தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்வதினால் கோவிட் தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தாயும் குழந்தையும் பாதுகாக்கப்படுகின்றன். மேலும் தடுப்பு மருந்து கோவிட் நோயினால் கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்பினையும் தடுக்கின்றது. எனவே கர்ப்பிணித் தாய்மார்கள் கோவிட் தடுப்பு மருந்தினை மருத்துவ ஆலோசனைப்படி பெற்றுக்கொள்ள வேண்டும். இலங்கையில் இதுவரை 13.8மில்லியன் கோவிட் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன. கோவிட் தடுப்பு மருந்து பெறுவதில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தற்போதைய கோவிட் தொற்றின் பரம்பலும் பாதிப்பும் அதிகமாக உள்ளமையினால் கோவிட் தொற்று தொடர்பான விழிப்புணர்வையும் தடுப்பு நடவடிக்கைகளையும் இரட்டிப்பாக்க முனைய வேண்டும்.

கோவிட் திரிபு பரம்பலைக் கட்டுப்படுத்த தற்போதைய சூழலில் கோவிட் நோய் தொடர்பான விழிப்புணர்வினை மேற்கொள்ளும் செயல்பாடுகளை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படல் வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளி பேணல் இரட்டிப்பாக அதிகரிக்கப்படல் வேண்டும். பொது இடங்களில் தொடுகையில் அடிக்கடி சவர்க்காரமிட்டுக் கைகழுவல் வேண்டும். வேலைத்தளங்கள், வியாபாரநிலையங்களில் தள மேற்பரப்புகளை கிருமி நீக்கி கொண்டு சுத்தம் செய்தலை இரட்டிப்பாக்க வேண்டும். பொது மக்களிற்கு கோவிட் தடுப்பு மருந்து ஏற்றும் செயற்றிட்டத்தை இரட்டிப்பாக அதிகரிக்க வேண்டும்.

முகக்கவசமணிதலை முறையாக கடைப்பிடித்தல் வேண்டும். முகக்கவசம் அணிதல் நேரத்தினை இரட்டிப்பாக்குதல் வேண்டும். இவ்வாறு சுகாதார மேம்பாடுகளை தற்போதைய சூழலில் இரட்டிப்பாக்க அதிகரிக்கும் போது நோய் தொற்றுவீதம் குறைக்கப்பட்டு நோய் பரம்பல் கட்டுப்படுத்தப்படும்.
கோவிட் தொற்றின் பாதிப்பிலிருந்து முற்றாக விடுபட பொதுமக்களினதும் மருத்துவப் பணியாளர்களினதும் இடையறாத பங்களிப்பு தற்போது அத்தியாவசியமாகின்றது.

மருத்துவர் சி.யமுனாநந்தா
(MBBS, DTCD)
பிரதிப் பணிப்பாளர்,
யாழ் போதனாவைத்தியசாலை