செய்திகள்

இலங்கையில் நேற்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது

நாட்டில் நேற்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிகளில் 499 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 42 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 527 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 413 ஆக பதிவாகியுள்ளது.கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 464 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.(15)