செய்திகள்

இலங்கையில் நாளொன்றில் அதிகளவான கொரோனா நோயாளர் உயிரிழப்பு எண்ணிக்கை இன்று பதிவானது!

இலங்கையில் இன்றைய தினத்தில் 2269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 138,085 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவளை நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 110,108பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 31 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

இதன்படி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை இலங்கையில் 923 ஆக அதிகரித்துள்ளது -(3)