செய்திகள்

இலங்கையில் பதினொரு இஸ்லாமிய குழுக்கள் மீது தடை செய்யப்படத்தையடுத்து தமிழகத்தில் பாதுகாப்பு தீவிரம்

இலங்கையில் பதினொரு இஸ்லாமிய குழுக்கள் மீது தடை அறிவிக்கப்பட்டமையை அடுத்து தமிழகத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். உட்பட 11 பயங்கரவாத குழுக்களை தடை செய்யும் நடவடிக்கையை இலங்கை ஆரம்பித்த நிலையில் இந்த அச்சுறுத்தல் உணரப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.மேலும் குறித்த தடையை அடுத்து ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் தொடர்பாக அனைத்து மாநில ஆணையர்கள் மற்றும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த அடிப்படைவாதிகள் இந்திய மண்ணிலிருந்து இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை வழிநடத்த படகு மூலம் தமிழ்நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.இதற்கான எச்சரிக்கையை அடுத்து தமிழக காவல்துறையினர் விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது(15)