செய்திகள்

இலங்கையில் பயணக் கட்டுப்பாடு 21 ஆம் திகதி நீக்கப்படுகிறது!

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலைல 4 மணிக்கு நீக்கப்படவுள்ளது.

இன்று நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலணிக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஜுன் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையிலும் மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.