செய்திகள்

இலங்கையில் மேலும் ஆயிரத்து 886 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் மேலும் 1,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.இன்றைய தினம் சற்று குறைந்த அளவில் தொற்று பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 2 இலட்சத்து 23 ஆயிரத்து 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 31 பேர் குணமடைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.(15)