செய்திகள்

இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டில் இன்று காலை முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி கொழும்பு மாட்டத்தின் மொரடுமுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வில்லோராவத்த கிராம சேவகர் பிரிவு. கம்பஹா மாவட்டத்தின் கடவத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்தெனிய தேவாலய வீதி மற்றும் ரணவிரு தர்மசிறி கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ககுல்விடிய கிராம சேவகர் பிரிவு, ரக்வான பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொத்துபிட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவு, களவான பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹபுகொட கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இன்ஜஸ்டி கிராம சேவகர் பிரிவு, ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போர்டயஸ் வத்த கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
-(3)