செய்திகள்

இலங்கையில் மேலும் 1,304 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது

இலங்கையில் மேலும் 1,304 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 109,450 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 503 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்த வெளியேறிய நிலையில், மொத்தமாக 96 ஆயிரத்து 478 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.அத்துடன், கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 678 பேர் மரணித்துள்ளதுடன் 12 ஆயிரத்து 294 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(15)