செய்திகள்

இலங்கையில் மேலும் 67 கொரோனா மரணங்கள் பதிவு!

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி இந்த உயிரிழப்புகள் பதிவானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 2202 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை இனி வரும் காலங்களில் மரணங்கள் பதிவாகி 48 மணி நேரத்திற்குள் அது தொடர்பில் அறிவிக்க நடவடிக்கையெடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
-(3)