செய்திகள்

இலங்கையைச் சேர்ந்த பெண் கட்டாரில் விபத்தில் பலி

அத்துருகிரிய, ஹோகந்தரவில் இடம்பெற்ற விமான விபத்தில் பலியான விமானியின் மனைவி கட்டாரில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில், உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

மேலும் விமானப் பணியாளர்கள் இருவர் உட்பட மற்றுமொரு விமானப் பணிப்பெண்ணும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி அத்துருகிரிய, ஹோகந்தரவில் இடம்பெற்ற விமான விபத்தில் பலியான விமானியின் மனைவியே, இந்த விபத்தில் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.