செய்திகள்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த ஐ.நா மனித உரிமைச்சபை உப மாநாட்டில் வலியுறுத்து

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துதாறு வலியுறுத்தும் உப மாநாடொன்று ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் செப்ரெம்பரில் சிறிலங்கா அறிக்கை ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்படுமென ஆணையாளர் செயிட் ராட் அல்ஹசேன்  அவர்கள் சபையில் தெரிவித்திருந்த நிலையில் இந்த உபமாநாடு இடம்பெற்றுள்ளது.
சியரா லியோனில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நாவினால் விசாரணைக்கு அமைக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின் முன்னாள் தலைவரும் பிரபல அனைத்துலக சட்டவாளருமான Geoffry Robertson QC, சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியரும் பிரபல மனித உரிமைவாதியுமாகிய இராமு.மணிவண்ணன் ஆகியோர் இந்த உப மாநாட்டின் பிரதான கருத்தாளர்களாக பங்கெடுத்திருந்தனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தியிருந்த இந்த உப மாநாட்டினை, நா.தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் Ibn Sina, CPS, ICPPG ஆகிய அமைப்புக்கள் கூட்டாக நாடாத்தியிருந்தன.
உப மாநாட்டில் கருத்துரைகளை வழங்கியிருந்த வள அறிஞர்கள், சிறிலங்காவின் உள்ளக விசாரணையினை புறக்கணித்திருந்ததோடு அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஊடாக சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த ஐ.நா பங்காற்ற வேண்டுமென வலியுறுத்தியிருந்தனர்.
 அரசியலமைப்பு குற்றவியல் மற்றும் ஊடகவியல் சட்டங்களில் உலகளாவியரீதியில் பிரசித்தி பெற்றவரும் இவற்றில் மைற்கற்களாக கொள்ளப்படும் பல வழக்குகளின் ஆலோசகரும் பிரிவி கவுன்சில் ((Privy Council) ஸ்ராஸ்பேர்க் (Strasbourg) நகரிலமைந்துள்ள ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றம் போன்றவற்றில் பல வழக்குகளில் பங்கெடுத்துவருமாக Geoffrey Robertson QC அவர்கள் விளங்குகின்றார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=UWw9dX7o804&feature=youtu.be” width=”500″ height=”300″]

[youtube url=”https://www.youtube.com/watch?v=cNYMGl3EKU8″ width=”500″ height=”300″]

[youtube url=”https://www.youtube.com/watch?v=2_KlFgKUPvA&feature=youtu.be” width=”500″ height=”300″]

TGTE4 TGTE5 (1) TGTE5 TGTE6 TGTE7 TGTE10