செய்திகள்

”இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்”: தமிழக ஆளுநர் தெரிவிப்பு

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

16 வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.
இதில் உரையாற்றிய ஆளுநர் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையிலுள்ள ஈழத் தமிழர்களுக்கு சம குடியுரிமை, அரசியல் உரிமைகளை உறுதி செய்திட, இலங்கை அரசை அறிவுறுத்துமாறு ,இந்திய அரசுக்கு அரசுக்கு வலியுறுத்தப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார் .

சமூக நீதி, சமத்துவத்தை அடித்தளமாக கொண்ட அரசாக இந்த அரசு செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-(3)