செய்திகள்

இலங்கை அணியிலிருந்து டிக்வெல நீக்கம்

இலங்கையில் இடம்பெறவுள்ள முக்கோண ரி20 தொடரிற்கான இலங்கை அணியிலிருந்து விக்கெட்காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான நிரோசன் டிக்வெல நீக்கப்பட்டுள்ளார்
இலங்கை தெரிவுக்குழுவினர் இன்று அறிவித்துள்ள அணியில் டிக்வெல இடம்பெறாத அதேவேளை துடுப்பாட்ட வீரர் தனஞ்செய சில்வா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஸ் அணியுடனான சமீபத்தைய போட்டிகளில் நிரோசன் திக்வெல சிறப்பாக விளையாடதது குறிப்பிடத்தக்கது.
அணியின் தலைவராக தினேஸ் சந்திமல் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை சுரங்க லக்மால் உபதலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக விலகியிருந்த குசால்ஜனித் பெரேரா நுவான் பிரதீப் மற்றும் துசாந்த சமீர ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்