செய்திகள்

இலங்கை அணி வீரர்களின் பின்னடைவுக்கு காரணம் ”FaceBook”? : தில்ஷான் வெளியிடும் தகவல்

தற்போதைய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பின்னடைவை சந்திப்பதற்கு அவர்கள் பேஸ்புக் , டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகியிருப்பதே காரணமென முன்னாள் அணித் தலைவரான திலகரட்ன தில்சான் தெரிவித்துள்ளார்.
தற்போதைய வீரர்கள் போட்டிகளுக்கான பயிற்சிகளின் போது எதிர்கொள்ளவுள்ள போட்டிகள் தொடர்பாக கதைப்பதை மறந்து தங்களின் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் அப்லோட் செய்து அதிக லைக்குகளை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)