செய்திகள்

இலங்கை கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை : 4 பேரும் ஒன்றாக ஆராய்வு

தேசிய கிரிக்கெட்டில் காணப்படும் நெருடிக்கடி நிலைமைகள் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ சிரேஷ்ட வீரர்கள் சிலருடன் விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளார்.
அஞ்சலோ மெத்தியூஸ் , லசித் மாலிங்க , திசர பெரேரா மற்றும் தினேஸ் சந்திமாலுடன் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதில் இலங்கை அணி எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் முக்கிய தீர்மானங்கள் சிலவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)