செய்திகள்

இலங்கை சர்வதேச கிரிக்கெட்கட்டுப்பாட்டுச் சபையிலிருந்து நீக்கப்படலாம்- அதிர்ச்சி எச்சரிக்கை

இலங்கை சர்வதேச கிரிக்கெட்கட்டுப்பாட்டுச் சபையிலிருந்து நீக்கப்படலாம் என்ற அதிர்ச்சிகரமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.சிசியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சட்சன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இலங்கையின் ஆங்கிலஊடகமொன்றிற்கு மின்னஞ்சல் மூலமாக இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் சுதந்திரத்தில் அரசியல்வாதிகள் தலையிடத்தொடங்கினால் இலங்கையின் கிரிக்கெட் கடும் விளைவுகளை எதிர்கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டினை நிர்வகிப்பதற்கு இடைக்காலசபை என்ற அந்த மின்னஞ்சலில், இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய தெரிவுசெய்யப்ட்ட உறுப்பினர்கள் இழைத்துள்ள தவறுகளை நிரூபிக்காமல்,இடைக்கால நிர்வாக சபையை நியமிப்பதற்கு கண்மூடித்தனமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையிலிருந்து இலங்கை இடைநிறுத்தப்படும் அபாயமுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையை நிர்வகிப்பதற்கு இடைக்கால சபையை அரசாங்கம் நியமிக்கவுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிந்தேன்.

இது குறித்து நாங்கள் ஆராய்ந்து உறுதிப்படுத்தவுள்ள அதேவேளை இது சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் விதிமுறைகளுக்கு முரணானது, எனவும் அவர் தெரிவித்துள்ளார்