செய்திகள்

இலங்கை ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கிறோம்

இலங்கையின் புதிய ஜனாதிபதியின் விஜயத்தை எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ள இந்தியா அவர் அமைதி மற்றும் கௌரவத்துடன் வாழ்வதற்கான இலங்கையின் சகல மக்களினதும் கருத்துக்களையும் செவிமடுப்பார் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத்அக்பரூடின் இதனை தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.என்எஸ் செய்திச்சேவைக்கு கருத்துதெரிவிக்கையிலேயே இதனi குறிப்பிட்டுள்ள அவர்,குறிப்பிட்ட கால இடைவெளியில் ஜனநாயகரீதியிலான மாற்றங்கள் நிகழும் வலுவான பாரம்பரியத்தை கொண்டுள்ள நாடு இலங்கை என குறப்பிட்டுள்ளார்.
ஜனநாய நடைமுறைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்,இந்திய பிரதமர் இலங்கையின் புதிய ஜனாதிபதியை விரைவில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்,இலங்கை ஜனாதிபதி தான் கூடிய விரைவில் வருவதற்கு எதிர்பார்த்திருப்பதாக உறுதியளித்துள்ளார், நாங்கள் அதனை எதிர்பார்த்துள்ளோம்,
மேலும் இலங்கையுடன் நட்புறவு சினேகம் நிலவும் உறவையும்,அந்த நாட்டில் சமாதானமும்,ஸ்திரத்தன்மையும் நிலவுவதையும் எதிர்பார்க்கிறோம், என அவர் குறிப்பிட்டுள்ளார்.