செய்திகள்

இலங்கை தனது நட்பு நாடுகளுடன் இணைந்து செயற்படும்: போயா மாநாட்டில் மைத்திரி

இலங்கை ஒரு கடல் சார்ந்த இயற்கை வள அனுகூலங்கள் நிறைந்த ஒரு நாடு என்ற வகையில் நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றும் என்றும் ஒத்துழைத்து செயற்படும் என்றும் இன்று சீனாவில் தெரிவித்தார்.

போயா சபையின் மாநாட்டில் உரையாற்றியபோது இவாறு தெரிவித்த அவர், எழுச்சி பெற்று வரும் பொருளாதாரங்களில் இலங்கையானது உயர் வளர்ச்சியை கொண்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் நாட்டின் தலா வருமானம் ஒப்பீட்டளவில் நடுத்தர பொருளாதார நாடுகளின் அளவுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சீனாவுடன் ஏற்படுத்தப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இதற்கு மேலும் வலுவூட்டும் என்றும் பிராந்தியத்தின் பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.