செய்திகள்

இலங்கை – பங்களாதேஸ் போட்டியிலிருந்து

தவறவிடப்பட்ட வாய்ப்பும் மேலதிக ஓட்டங்களும்
இன்றை போட்டியில் துடுப்பாட்ட வீரர்கள் அளித்த பல வாய்ப்புகள் தவறவிடப்பட்டன,இதில் 42 ஓவரில் குமார்சங்ககார அளித்த வாய்ப்பை மொமினுள் ஹக் தவறவிட்டார்,அதன் பின்னர் ரன்அவுட் வாய்ப்பிருப்பதும் அவருக்கு தோன்றவே தவறவிட்ட பந்தை எடுத்து எறிந்தார். ஆனால் அந்த பந்தை பிடிக்க எவருமிருக்;கவில்லை லோங் ஓன்னிலிருந்த டஸ்கினின் கவனம் வேறு எங்கோயிருந்தது. ஆதனால் அவர் பந்து தன்னை நோக்கி வருவதை அவர் கவனிக்கவில்லை , வேறு மைதானங்கள் என்றால் நான்கு ஓட்டங்கள் பெறப்பட்டிருக்கும், மெல்பேர்னில் மூன்று ஓட்டங்களே பெறப்பட்டன.

திரிமன்ன அளித்த வாய்ப்புகள்

எதிரணி வீரரின் பலவீனங்களை ஆராய்ந்து அதற்கு ஏற்ப திட்டங்களை வகுக்கலாம் ஆனால் அவர்கள் களத்தில் தரும் வாய்ப்புகளை சரியாக பிடிப்பது அவசியம்.பல அணிகளுக்கு திரிமன்ன ஓவ்ஸ்டம்பிற்கு வெளியே பலவீனமானவர் என்பது தெரியும்,இதனை அறிந்த மோர்ட்டசா அதற்கு ஏற்றாற்போல இரு அற்புதமான பந்துகளை வீசினார்.அவர் எதிர்பார்த்தது போல் திரிமன்னவின் துடுப்பில் பட்டு ஓரு பந்து ஸ்லிப்பை நோக்கி சென்றது, ஆனால் அனாமுல் அதனை தவறவிட்டார். அதன் பின்னரும் திரிமன்ன பல வாய்ப்புகளை வழங்கினார், பங்களாதேஸ் வீரர்கள் அலற்றை தவறவிட்டனர்.

நடுவருடன் மோதும் மஹேல

மஹேல ஜெயவர்த்தன போன்று நடுவர்களுடன் சமீபகாலங்களில் அதிகம் மோதிய வீரர்கிடையாது.எனினும் இன்று அவருடன் அவருடைய நண்பர்களும் இணைந்துகொண்டனர்.
சுரங்க லக்மலின் பந்தை மொமினுள் அடித்தார் பந்து விக்கெட்காப்பாளரிடம் சென்றது,வீரர்கள் உடனடியாக முறையீடு செய்யாவிட்டாலும் நடுவரின் தீர்ப்பிற்கு எதிராக மறு ஆய்வு செய்தனர்.
சினிக்கோ இல்லாததால் தீர்ப்பு வழங்கப்படாததை தொடர்ந்து மகேலவும் சகாக்களும் நடுவரிடம் விளக்கம் கோரினர்.