செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாட்டை கண்டித்து தனியார் பேருந்துகள் பகிஸ்கரிப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை கண்டித்து தனியார் பேரூந்து ரிமையாளர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடப்போவதாக வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தலைவர் ஏ. டபிள்யூ. ரசீன் இன்று தெரிவித்தார்.

வவுனியா தனியார் பேரூந்து உரிமையார் சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் தனியார் பேரூந்துகளுக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்குமென முரண்பாடு ஏற்படாத வகையில் நேரசூசி வழங்கப்பட்டிருந்தது எனினும் தற்போது அதிகளவான பேரூந்துகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் நேரசூசியை அலட்சியம் செய்து போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதுடன் ஏனைய மாகாணங்களில் இருந்து வரும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளை வவுனியா சாலையில் தரித்து பயணிகளை ஏற்ற அனுமதிக்கின்றனர்.

இதன் காரணமாக தனியார் பேரூந்துகள் நஸ்டத்தை எதிர்கொள்ளும் நிலையக்கு தள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா அரசாங்க அதிபர் மற்றுமு; தேசிய போக்குவரத:து அணைக்குழு உட்பட மத்திய மற்றும் மாகாண போக்குவரத்து அமைச்சர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை. இதேவேளை வவுனியாவில் அமைக்கப்பட்டும் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவேண்டும் என்பதனையும் வலியுறுத்தி எதிர்வரும் 11 ஆம் திகதி பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

எமது தீர்மான திகதிக்கு முன்னர் தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொடர்ச்சியான பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவும் தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.